உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
உம்மையன்றி யாரைப் பாடுவேன் – இயேசையா
உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே!

1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே
தேடினதால் கண்டடைந்தேன் பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தர்! -உம்பாதம்

2. புது எண்ணெயால் புது பெலத்தால் புதிய கிருபை புதுக்கவியால்
நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நுாதன சாலேமில் சேர்த்திடுவீர்! -உம்பாதம்

3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர்
திசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் -உம்பாதம்

4. என்முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே! -உம்பாதம்

5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
கிளை நறுக்கி களைபிடுங்கி கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்வர்! -உம்பாதம்

6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா! ஆருயிரே
நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன்! -உம்பாதம்

7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
சீக்கிரமாய் சேர்த்திடுவர் சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன்! -உம்பாதம்



umbadham paninththen enth nalum thuthiye

umbadham paninththen enth nalum thuthiye
ummaiyandri yaraib baduven – iyesaiya
unthdhan anbu ullam pongkuthe!

1. parisuthdhame paravasame paranecharule varam porule
thedinathal kantadainththen paditab padalkal iinthdhalithdhar! -umbadham

2. buthu enneyal puthu belaththal puthiya kirubai puthukkaviyeel
nirabbi nidham natadhthukinrar nudhana salemil serththiduveer! -umbadham

3. nerukkaththile ummai azhaiththen nerungki udhavi enakkalithdheer
thisaikkeddengkum alainththidamal dheeviram vanththennaith thangkukinreer -umbadham

4. enmun sellum um samukam enakku alikkum ilaibbarudhal
umathu kolum um dhadiyum unmaiyay ennaiyum thetrriduthe! -umbadham

5. kanisedi neer nilaiththirukkum kodiyay adiyen patarnththilangka
kilai narukki kalaibidungki karthdhare kaththennais suthdham seyveer! -umbadham

6. en idhaya theyvame neer enathu iraiva! aaruyire
nesikkiren iyesuve um nesamukam endru kandiduven! -umbadham

7.seerudane berutane siranththu jolikkum kodumudiyil
seekkiramay serththiduvar seeayonai vanjsiththu nadukiren! -umbadham